Advertisment

சிவகார்த்திகேயனுடன் இணைந்த உக்ரைன் நடிகை!

ukrainian actress maria ryaboshapka female lead role sk20 film

நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்'படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் 'அயலான்'படத்திலும்நடித்து முடித்துள்ளார். இதில் அயலான்' படம்இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டான் படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாகபிரபல தெலுங்கு இயக்குநர்அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன்இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில்எஸ்.கே 20 படத்தின் கதாநாயகி குறித்ததகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'எஸ்.கே 20' படத்தில்உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மரியா ரியாபோஷாப்கா நடிக்கவுள்ளார்.இவர் ஹாட்ஸ்டாரில் வெளியான 'ஸ்பெஷல் ஆப்ஸ்' இந்தி வெப் தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

actor sivakarthikeyan sk 20
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe