/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/129_10.jpg)
டாக்டர்' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்'படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் 'அயலான்'படத்திலும்நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புநிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில்உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாகபிரபல தெலுங்கு இயக்குநர்அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன்இசையமைக்கிறார்.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல்வெளியாகியுள்ளது. அதன்படி உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மரியா ரியாபோஷாப்கா எஸ்.கே 20 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ள ஒலிவியா மோரிஸ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மரியா ரியாபோஷாப்கா ஒப்பந்தமாகிஇருப்பதாகசினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.இவர் ஹாட்ஸ்டாரில் வெளியான 'ஸ்பெஷல் ஆப்ஸ்' இந்தி வெப் தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)