மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனான் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் படம் சைக்கோ. த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இப்படம், வெற்றிகரமாக ஓடியதால் நேற்று நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தியது படக்குழு. அப்போது அதில் படத்தில் நடித்த உதயநிதி, நித்தியா மேனன், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/udhayanithi-stalin_1.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஒரு வெற்றிப் படம் கொடுத்து மூன்று வருடம் ஆகிவிட்டது. உங்களையெல்லாம் கடைசியா ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் அப்போ பார்த்தது. நான்கு படம் சரியா எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதெல்லாம் மோசமான படங்கள் கிடையாது கொஞ்சம் சுமாரான படம்தான். அந்த படங்கள் கொஞ்சம் கமெர்ஷியலா வெற்றி அடையவில்லை. முதலில் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல இங்கு அமர்ந்திருக்கும் சைக்கோ படக்குழுவுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த விழாவிற்கு வரமுடியாமல் முக்கியமான மூன்று பேர். ஒருவர் இசைஞானி இளையராஜா ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிசி ஸ்ரீராம் சாரின் உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் அவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறுதியாக இந்த படத்தின் நடிகை அதிதிராவ் ஹைதாரிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படத்தில் அவர்தான் என்னுடைய ஜோடி, இரண்டு நாள்தான் மூன்று நாட்கள்தான் பார்த்துக்கொண்டோம். அந்தளவிற்கு பெரிய லவ் ஸ்டோரி இது. இப்போதான் படத்தில் பார்த்திருப்பீர்களே! இரண்டு நாட்கள் அவர் பின்னால் சுற்றுவேன் அதனையடுத்து ராஜு அவரை கடத்திவிடுவார். எனக்கும் அவங்களுக்கும் கெமிஸ்ட்ரி இல்லை, அவங்களுக்கும் ராஜுக்கும்தான் படத்தில் கெமிஸ்ட்ரி ஓவராக இருந்தது.
படத்தின் கடைசியில் ராஜுக்கு சாவியை கொடுத்து ஹீரோ ஆக்கிவிடுவாங்க, என்ன டம்மியாக்கிட்டாங்க. சொல்லப்போனால் இந்த படம் காதல் கொண்டேன். அந்த படத்தில் தனுஷ்தான் ஹீரோ, அதுபோல இந்த படத்தில் ராஜ் தான் ஹீரோ. நான் சும்மா காப்பாற்ற போன காதலன் அவ்வளவுதான். கடைசியில் அந்த காதல் கூட கை கூடியதா என்று தெரியவில்லை. என்னிடம் டேட் கேட்டார், என்னிடம் டேட் இல்லை. அதிதியை வைத்து ஒரு பிரஸ் மீட் போட்டு முடித்துவிட்டார்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)