udhayanithi stalin

Advertisment

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், அண்மையில் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்கிற கட்சியைப் பதிவு செய்திருந்தார். இந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று விஜய் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க இளைஞரணித் தலைவரும்நடிகருமான உதயநிதி ஸ்டாலினிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்திருக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், “விஜய்யின் தந்தையிடம் தான் கேட்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி குறித்து, தலைமைதான் முடிவு செய்யும்” என்று கூறினார்.