
இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி கடந்த வருடத்திற்கான விருது பட்டியலில் இரண்டு தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' படத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இந்தப் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் ஒட்டுமொத்தப் படத்திலும் இருப்பதுபோன்ற திரைக்கதையை அமைத்திருந்தார் பார்த்திபன். படம் வெளியானபோதே இந்தப் படத்தின் புதுமை பலரையும் கவர்ந்தது.
இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படத்தில் 'ஒத்த செருப்பு' படம் தேர்வாகவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தற்போது மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ளது.
இதன்பின், தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார், நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு கொடுக்கப்பட்ட இந்த விருது குறித்து ட்விட்டரில், “அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட் பார்சல்ல்ல்...” என்று தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த பார்த்திபன் வரிசையாக ட்வீட் மழைகளால் தி.மு.க எம்.பி செந்தில்குமாருக்கு பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், தி.மு.க செந்தில்குமாரின் இந்தப் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து நடிகரும் தி.மு.க இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ஒலிப்பதிவு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பார்த்திபன் கூறுகையில், “சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு, தி.மு.க.வின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு.உதயநிதி ஸ்டாலின், அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதைக் கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு, என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன். யாகாவாராயினும் நா காக்க.....தற்சமய” என்று குறிப்பிட்டுள்ளார்.