style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'நிமிர்' படத்தையடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'கண்ணே கலைமானே' படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பி.சி.ஸ்ரீராம் முதல்முறையாக இவர்கள் கூட்டணியில் ஒளிப்பதிவு செய்யப்போகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டு மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கயுள்ளது. மேலும் 'துப்பறிவாளன்' படத்தையடுத்து இயக்குனர் மிஷ்கினின் புதிய படத்தில் சாந்தனு நாயகனாக நடிப்பதாக முன்னர் சொல்லப்பட்ட நிலையில் அந்த படத்தைத் தயாரிக்க முன்வந்த நிறுவனம் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் தற்போது அதே கதையில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பதோடு படத்தையும் தயாரிப்பதாக தகவல் வெளியாகவுள்ளது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">