Advertisment

"வழிகாட்டும் ஆசானாக நின்ற நவீன தமிழகத்தின் தந்தை முத்தமிழறிஞர்" - உதயநிதி பெருமிதம்!

gdgdzgsg

Advertisment

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாள் இன்று (03.06.2021) கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்ட நிலையில், பிரபலங்கள் பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், திருவல்லிகேணி, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

"பெரியாரின் பகுத்தறிவு - தமிழ்நாடு கண்ட அண்ணாவின் மாநில சுயாட்சி இவற்றை பாதுகாத்து - இந்திய ஒன்றிய மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆசானாக நின்ற நம் நவீன தமிழகத்தின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாளில் அவர் வழியில் உழைக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம். எளியோர் மேன்மையை அடிநாதமாக கொண்டு உழைத்த கலைஞர் வழியில் பயணிப்போம்" என பதிவிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe