Advertisment

“மாஸ் எண்டர்டெயினர்...” - வெளியான ‘கூலி’ படத்தின் முதல் ரிவ்யூ

88

இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய ஆளுமையாக திகழும் ரஜினிகாந்த், தனது 50வது ஆண்டுகாலத் திரைபயணத்தை நிறைவு செய்யவுள்ளார். இவர் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வரும் 15ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை கடக்கிறது. இன்று வரை தனது ஸ்டைலான நடிப்பாலும், எனர்ஜியுடன் தோன்றும் வசீகரத்தாலும், பஞ்ச் வசனங்களாலும் தொடர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவர், தற்போது கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை(14.08.2025) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு திரை பிரபலங்களைத் தாண்டி அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதில் எடப்பாடி, ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு கூலி வெற்றி பெற வாழ்த்தி பதிவிட்டிருந்தார். பிரேமலதா விஜயகாந்த், ரஜினிக்கு திரையுலக சங்கங்கள் மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். 

89

இவர்களைத் தொடர்ந்து தற்போது துணைத் தலைவரும் அமைச்சருமான உதயநிதி, “கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினர் ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு படம் வெற்றி பெற வாழ்த்து கூறியுள்ளார். 

Advertisment

கூலி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகிறது. ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தையொட்டி இப்படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் படத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர். 

Actor Rajinikanth Coolie lokesh kanagaraj Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe