Advertisment

"நான் அதுக்காக வரலங்க, தேவையில்லாம மாட்டிவிடாதீங்க" - உதயநிதி பேச்சால் எழுந்த சிரிப்பலை 

Udhayanidhi Stalin

Advertisment

இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனியை வைத்து 'தி வாரியர்' படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள சிம்பு பாடியிருக்கும் 'புல்லட்' பாடல் நேற்று வெளியானது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகரும் திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துவிட்டு படம் தயாரானவுடன் எனக்கு திரையிட்டு காட்டுங்கள் என்றார். உடனே கீழே இருந்த ஒருவர் படம் ரைட்ஸ் வாங்கிக்க போறீங்களா எனக் கேட்க, உடனே சுதாரித்த உதயநிதி, "நான் அதுக்காக இந்த விழாவுக்கு வரலங்க, என்னை தேவையில்லாம மாட்டிவிட்றாதீங்க. இருக்கிற படத்தையே என்னால ரிலீஸ் செய்யமுடியல" எனக் கூற அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

ஆதித்ய மியூசிக் யூடியூப் சேனலில் வெளியான புல்லட் பாடல் 3.7 பார்வையாளர்களை கடந்து பலரின் கவனத்தை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe