”மன்னிச்சிருங்க கமல் சார், நான் ஏறியது ரயில் அல்ல; ராக்கெட்” - உதயநிதி கலகல பேச்சு

 Udhayanidhi Stalin

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர்

நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “டான் படத்தின் வெற்றி விழாவில் சில உண்மைகளைச் சொல்லப்போகிறேன் என்று கூறி நிறைய உண்மைகளை பேசினேன். இந்தப் படமும் வெற்றியடைந்துவிட்டதால் உண்மைகளை பேசப்போகிறேன். கமல் சார் எனக்குத்தான் முதலில் படம் காண்பித்தார். நாங்கள் நாலு பேர் படம் பார்த்தோம். படத்தின் இடைவேளை காட்சியை பார்த்ததும் எல்லோரும் ஷாக் ஆகிவிட்டோம். அப்படி ஒரு இண்டர்வெல் ப்ளாக்கை தமிழ் சினிமாவில் இதுவரை நான் பார்த்ததில்லை. அப்போதே இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால், இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்பதை எதிர்பார்க்கவேயில்லை.

விக்ரம் படத்தை கமல் சார் ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் தாண்டி சாமானிய மக்கள்வரை அனைவருமே கொண்டாடுகிறார்கள். இந்தப் படம் இதுவரை 75 கோடி ரூபாய் ஷேர் செய்துள்ளது. இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் இவ்வளவு வசூல் செய்ததில்லை. அடுத்த படமும் இதே மாதிரி பெரிய வெற்றியயை லோகேஷ் கொடுக்க வாழ்த்துகள். விக்ரம் என்ற ரயிலில் ஏறிய கடைசி பேசஞ்சர் நான்தான் என்று ஆடியோ லான்ஞ்சில் சொன்னேன். மன்னிச்சிருங்க கமல் சார், நான் ஏறியது ரயில் அல்ல; ராக்கெட். ஏவுகணை மாதிரி அது சென்று கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe