Advertisment

"சினிமாவில் சிவகார்த்திகேயன்தான் உண்மையான டான்; அவர் வைத்ததுதான் சட்டம்" - உதயநிதி ஸ்டாலின் புகழாரம் 

Udhayanidhi Stalin

Advertisment

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் சிபி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "ஒட்டு மொத்த டான் படக்குழுவையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இப்போது சிவகார்த்திகேயன்தான் சினிமாவில் டான். அவர் வைத்ததுதான் சட்டம். தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு டான்கள் உள்ளனர், ஒன்று சிவகார்த்திகேயன், மற்றொன்று அனிருத். அவர்கள் இருவரும் மிகப்பெரிய வெற்றிகளை குவிக்கின்றனர், மேலும் அவர்களது காம்பினேஷன் நிச்சயமாக வெற்றியை தரக்கூடியது. 10 நாட்களுக்கு முன்பே டான் படத்தை பார்த்துவிட்டேன். டாக்டரைவிட இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பலர் இந்த திரைப்படத்தை கல்லூரி பின்னணி கதை என்று கருதியிருக்கலாம், ஆனால் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் ஆகியோருடன் ஒரு அழகான பள்ளி பின்னணி காட்சிகள் இந்த படத்தில் உள்ளது. எஸ்.ஜே.சூர்யா கல்லூரி பகுதிகளில் சிறப்பாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி கடைசி 30 நிமிடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்தார்.

Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe