/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin_210.jpg)
இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி மாதம் 7ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் ப்ரீ புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். இந்த நிகழ்வில்பேசிய உதயநிதி ஸ்டாலின்," ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்தமிழகத்தில்3 இடங்களில் ஆர்.ஆர்.ஆர். படத்தை வெளியிடுகிறது. இயக்குநர்ராஜமௌலி மாவீரன் திரைப்படம் சத்யம் திரையரங்கில் வெளியாகவேண்டும் என ஆசைப்பட்டார். அவரின் ஆசைப்படியேமாவீரன் திரைப்படம் சத்யம் திரையரங்கில் வெளியானது. அதைப் போலவே இந்த முறையும்சத்யம் திரையரங்கில் உள்ள 6ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்களில்'ஆர்.ஆர்.ஆர்' திரையிடப்படும் என உறுதியளிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)