udhayanidhi stalin said thiruchitrambalam movie release july1

செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர்பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்தபடக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

Advertisment

இப்படம் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக்கூறப்பட்டநிலையில் தற்போது இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில்உள்ளனர்.