Advertisment

"இப்படிக்கு திமுக தொண்டன்" - வார்த்தைகளில் விளையாடும் பார்த்திபன்

udhayanithi release iravin nizhal movie next song

Advertisment

‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க , ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், "அடுத்த... அடுத்த... அடுத்த... லிரிக் வீடியோவைசட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவார். இப்படிக்கு திமுக(திரைப்பட முன்னேற்ற கழக) தொண்டன் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ACTOR PARTHIBAN iravin nizhal Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe