udhayanidhi stalin next movie Kalagathalaivan

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, சினிமா விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a33d57ea-5715-4fda-a568-074135ec845b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_5.jpg" />

Advertisment

இதையடுத்து தடம், மீகாமன் ஆகிய படங்களைஇயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடித்து வந்தார். இதை அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடித்து அடுத்தக்கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'கலகத் தலைவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் மும்பையை கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஃபகத் பாசில், வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.