udhayanidhi stalin name removed in red giant movies banner

அமைச்சர் உதயநிதி திரைத்துறையில் நடிகராகப் பயணித்தது மட்டுமல்லாமல் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வழிநடத்தி வந்தார். அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி இனிமேல் திரைப்படங்களில் நடிப்பதில்லை எனவும் தனது கடைசி படமாக மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' தான் வெளியாகும் என அறிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் நடிப்பதிலிருந்து உதயநிதி விலகியிருந்தாலும், அவர் வழி நடத்தி வந்த தயாரிப்பு நிறுவனம் பல படங்களைத்தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'வாரிசு' படத்தைத்தமிழகத்தின் சில பகுதிகளில் உதயநிதி நிறுவனம் வெளியிடவுள்ளது. இதனைப் படக்குழு ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருந்த நிலையில் அந்த வீடியோவில் உதயநிதி பெயர் இடம் பெறவில்லை. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் லோகோ மட்டுமே இடம்பெற்றுள்ளது.

Advertisment

அமைச்சராக இருப்பவர்கள் வேறு எந்த ஆதாயம் தரும் பொறுப்புகளிலும் இருக்கக்கூடாது என்பதனால் உதயநிதி இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.