vdgdgdg

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்குச் சொந்தக்காரர் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்கள் நேற்று (17.05.2021) இரவு காலமானார். ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன், அண்மைக்காலமாக முதுமை நோய்க்கான சிகிச்சையிலிருந்த நிலையில், தமது 99வது வயதில் மறைந்தார். இவரது மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

dgdgdg

"தமிழின் மிகச்சிறந்த மூத்த கதைசொல்லி. கரிசல்காட்டு மனிதர் வாழ்வை அவர்தம் மொழியிலேயே இலக்கியமாக்கியவர். எழுத்துலக பெரியவர் கி.ராஜநாராயணன் அவர்கள் மறைந்தது அறிந்து வேதனையடைந்தேன். அவர்களின் மரணம் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல். வாசகர் - குடும்பத்தாருக்கு என் ஆறுதல்" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment