கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது.

bdfb

Advertisment

இந்நிலையில் சினிமாத்துறையில் பணியாற்றும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்கு பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். இதனையடுத்து சூர்யா, ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நிதியுதவி செய்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பல பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய் நிதியுதவியை சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.