/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/293_12.jpg)
அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. இன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி இந்த படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் காண வேண்டிய சமூக பொறுப்புள்ள திரைப்படைப்பாக 'சித்தா' திரைப்படம் வெளியாகியுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரக்கப் பேசுவது மட்டுமன்றி, அத்தகைய கொடுமைகளை களைவதற்கான தீர்வையும் இப்படம் முன் வைக்கிறது. சித்தா படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
Follow Us