/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/291_20.jpg)
இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று பிறந்தநாள் காண்கிறார். தன்னுடைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாகத்தான் தன்னுடைய படங்கள் இருக்கும் என சொல்லும் அவருக்கு தற்போது துணை முதல்வர் உதயநிதி எக்ஸ் பக்கம் வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “திரைமொழியில் மனிதம் பேசும் மகத்தான இயக்குநர் ஒடுக்கப்பட்ட - விளிம்பு நிலை மக்களின் வலியையும் - அவர்களுக்கான அரசியலையும் தனது படைப்புகளின் மூலம் இடைவிடாது பேசி வரும் ஆகச்சிறந்த படைப்பாளி மாரி செல்வராஜுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணிகள் மென்மேலும் சிறக்கட்டும் - கனவுகள் கைகூடட்டும். என் அன்பும், வாழ்த்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் துணை முதல்வர் உதயநிதி நடித்திருந்தார். இப்படம் தான் தனது சினிமா கரியரில் கடைசி படம் எனச் சொல்லி உதயநிதி சினிமாவை விட்டு விலகிவிட்டார். பின்பு மீண்டும் நடிக்க வந்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பேன் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)