''நான் சினிமா தயாரிக்க ஆரம்பித்தது முதல் நல்ல நண்பர் அவர்'' - உதயநிதி ஸ்டாலின் வேதனை!

sfsf

பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளரான காமெடி நடிகர் வி.சுவாமிநாதன் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழ்த் திரையுலகில் நிகழும் முதல் கரோனா மரணமான இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்...

"திரைப்படத் தயாரிப்பாளர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் திரு.சுவாமிநாதன் அவர்களின் மரணச் செய்தி கேட்டுக் கலங்கிப்போனேன். நான் சினிமா தயாரிக்க ஆரம்பித்தது முதல் நல்ல நண்பர். அற்புதமான மனிதர். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe