Advertisment

உதயநிதி தலையீடு: கிடப்பில் போட்ட படத்தை தூசி தட்டும் கமல் படக்குழு 

Udhayanidhi Stalin

Advertisment

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான டான் திரைப்படம் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிபெற்றது. இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்தார். மேலும், அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்துவரும் லைக்கா நிறுவனத்திற்கும் பாராட்டுத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி, “பொன்னியின் செல்வன் படம் தயாராகிவிட்டது, எப்போது பார்க்குறீங்க என லைக்கா தமிழ்க்குமரன் சார் கேட்டார். விரைவில் பார்க்கிறேன் என அவரிடம் சொல்லியிருக்கிறேன். சுபாஷ் கரண் சாரிடம் நேற்றுதான் பேசினேன். விரைவில் இந்தியன் 2 படத்திற்கான வேலையையும் ஆரம்பிக்க போறோம்” எனத் தெரிவித்தார்.

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு லைக்கா நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட கைவிடப்படும் கட்டத்திற்குச் சென்ற நிலையில், தற்போதுஉதயநிதி ஸ்டாலினின் பேச்சு கமல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe