Advertisment

ஜிவி பிரகாஷ் படத்தை ப்ரொமோட் செய்த உதயநிதி ஸ்டாலின்!

bfhdrhdr

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிவருகிறார்.

Advertisment

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடிக்கிறார். அவர், அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பானது முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் (11.08.2021) இன்று வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். 'இடி முழக்கம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

Advertisment

GV prakash Idi Muzhakkam seenu ramasamy Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe