/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-11_3.jpg)
தமிழ் சினிமாவில் புது ஜானர் மற்றும் புது முயற்சிகளை எடுத்து வருபவர் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். 'டிக் டிக் டிக்', 'மிருதன்', 'டெடி' என பல புதுமையான படைப்புகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் அடுத்ததாக ஆர்யாவை வைத்து 'கேப்டன்' படத்தை இயக்கி வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'டெடி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் 'கேப்டன்' படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மான்ஸ்டரை மையமாக வைத்து இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 'கேப்டன்' படத்தின் திரையரங்கு உரிமை மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us