கார்த்தியுடன் கைகோர்த்த உதயநிதி

Udhayanidhi joins with Karthi

'சுல்தான்' படத்திற்குப் பிறகு கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே இயக்குநர் மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்திலும் நடித்து வருகிறார். 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான், ஜார்ஜியாவிலும் நடத்தி முடித்துள்ள படக்குழு தற்போது சென்னையில் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திவருகிறது.

இந்நிலையில் 'சர்தார்' படத்தின் புதிய அப்டேட்வெளியாகியுள்ளது. அதன் படி 'சர்தார்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor karthi ps mithran Sardar Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe