கமல்ஹாசனுக்கு பெரியார், அம்பேத்கர் சிலைகளை பரிசளித்த உதயநிதி

Udhayanidhi gifted Periyar and Ambedkar statues to Kamal Haasan

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விநியோகஸ்தராகவும் பயணித்து வருபவர் உதயநிதி. சமீபத்தில் இவர் வெளியிட்ட 'விக்ரம்' மற்றும் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.

அந்த வகையில் கமல்ஹாசன் 'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்து படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். இதனை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, "நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் சாருக்கு நன்றி. 'விக்ரம்' படத்தில் உடன் பங்கேற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம்" என குறிப்பிட்டுள்ளார்.

actor kamal hassan nenjukku needhi Udhayanidhi Stalin vikram movie
இதையும் படியுங்கள்
Subscribe