மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது. உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகவுள்ள இப்படம் யு/ஏ சான்றிதழுடன் நாளை (29.06.2023) வெளியாகிறது.
இப்படத்திற்கு தனுஷ் பாராட்டுதெரிவித்து படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்கள் உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ். இது தொடர்பாகஉதயநிதிவெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய கமல்ஹாசன் சாருக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல் சாருக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த கமல், மேடையிலே படக்குழுவினரை வாழ்ந்திருந்தார். அப்போது மேடையில் பேசிய மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய நிலையில் அது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி @ikamalhaasan சார் அவர்களுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன் ❤️. #MAAMANNAN ?@RedGiantMovies_@Udhaystalinpic.twitter.com/eNFtjZ4WIE
— Mari Selvaraj (@mari_selvaraj) June 28, 2023