Advertisment

கமல் - உதயநிதி கூட்டணியில் இணைந்த ஹிட் பட இயக்குநர் 

udhayanidhi and kamal haasan movie director Prasath Murugesan

Advertisment

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து தடம், மீகாமன் ஆகிய படங்களைஇயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன்படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும்முடிந்து அடுத்த கட்ட பணியில் உள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="83e56ce4-ca10-4cd5-8556-0ccaaa84f54e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-X-300-Viruman_0.jpg" />

இப்படங்களை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அடுத்தாகராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் இயக்குநர்யார் என்ற அறிவிப்பு வெளியாகாத நிலையில் தற்போது இயக்குநர்குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படத்தை கிடாரி இயக்கிய முருகன் பிரசாத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ACTOR KAMAL HASSHAN Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe