Published on 22/09/2018 | Edited on 22/09/2018

ஏபிசிடி, நேபாளி ஆகிய படங்களைத் தொடர்ந்து ஓ.எஸ்.டி பிலிம்ஸ் ராம சரவணன் தயாரிப்பில், தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, பிரியசகி, தூண்டில் ஆகிய படங்களை இயக்கிய கே.எஸ்.அதியமான் இயக்கும் புதிய படம் 'ஏஞ்சல்'. கண்ணே கலைமானே படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக RX 100 தெலுங்கு பட நாயகி பாயல் ராஜ்புத் மற்றும் கயல் ஆனந்தி நடிக்கின்றனர். 'ரொமாண்டிக் ஹாரர்' ஜானரில் உருவாகும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. மேலும் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.