கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. அவர்களுக்கு அரசு தரப்பில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

jhtjgt

Advertisment

மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலி பணியாளர்களுக்கும், நடிகர் சங்கத்திற்கும் ஃபெப்சியின் வேண்டுகோளுக்குபின் சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்து வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சுமார் 60 பேருக்கு, தனது பிறந்த நாளையொட்டி தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனும், இயக்குனர் ஏ.எல் விஜய்யின் சகோதரருமான நடிகர் உதயா 15 நாட்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கியுள்ளார்.