
பாலிவுட் படமான ‘Article 15’படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (19.04.2021) கலந்துகொண்டார். படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதில் எம்.செண்பகமூர்த்தி (இணை தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவிஸ்), ராஜா (விநியோக நிர்வாகம் - ரெட் ஜெயன்ட் மூவிஸ்) ஆகியோர் உடனிருந்தனர். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் அவர்களின் பே வியூ புரொடக்ஷன்ஸ் வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கும் இப்படத்தை ‘கனா’ பட இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)