/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/j_9.jpg)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் 'சிவகார்த்திகேயன்'. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது 'டான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 'டான்' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் 'எஸ்கே' ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மே 13-ஆம் தேதி வெளியாகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)