Advertisment

‘மாமன்னன்’ சூட்டிங் குறித்து உதயநிதி ஸ்டாலின் அப்டேட்

Udayanidhi Stalin update on 'Mamannan suiting'!

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த'கலகத்தலைவன்' படத்தின் ட்ரைலர் மற்றும்இசை வெளியீட்டு விழா நேற்று (10/11/2022) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, இயக்குநர்கள் மிஷ்கின், மாரிசெல்வராஜ், பிரதீப், சுந்தர்.சி, நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கலகத்தலைவன்படக்குழுவினருக்கும், என்னுடைய சக நடிகர்கள் அத்தனை பேருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், என்னுடைய நற்பணி மன்றத்தைச் சார்ந்த தம்பிகளுக்கும் நன்றி. அருண் விஜய் சொன்னாருல. அவரு படத்தை எடுத்து முடிச்சிருவாரு. அப்புறம் போஸ்ட் புரொடக்ஷன்ல ரொம்ப டைம் எடுத்துக்குவாருனு. அது ரொம்ப டைம் இல்ல. ரொம்ப ரொம்ப டைம். எவ்வளவு டைம்னா, நாங்க இப்படி ஒரு படம் எடுத்ததே மறந்துட்டோம். சூட்டிங் முடிச்சிட்டேன். இந்தப் படம் முடிச்சிட்டு தான் நெஞ்சுக்கு நீதி போனேன்.

Advertisment

நெஞ்சுக்கு நீதி போய் முடிச்சிட்டு, அது ரிலீஸ் ஆகி, அப்புறம் திருப்பி இந்த படத்திற்கு கூப்புட்டாங்க.ஓ, இப்படி ஒரு படம் பண்ணிட்டு இருந்தோம்ல. அப்படினு சொல்லி, திருப்பி பர்ஸ்ட்ல இருந்து கதையெல்லாம் கேட்டுட்டு, மறுபடியும் நடிச்சேன்.70 நாள் எடுத்தாரு. ஆனால், மூணு வருஷம் ஆச்சு. பூஜைபோட்டு 2019-ல ஆரம்பிச்சேன். ஒவ்வொரு ஷாட்டா செதுக்கி வச்சிருக்காரு. ஒரு சின்ன சீன ஃபுல் டே எடுப்பாரு. நாம கூட முடிஞ்சிருச்சு போல இருக்கு,அடுத்த சீனுக்கு போயிடுவாறு போலனு பாத்தா அது டே புல்லா போகும். அதுக்கு அப்புறம் இன்னொரு படத்துக்கு போனேன். மாமன்னன்.இவரு 70 நாள் வச்சி செஞ்சாரு.அவரு 120 நாளு. இன்னும் முடிக்கல.இப்ப கேட்டிங்கல, அப்டேட் வேணும்னு. மாமன்னன் சூட்டிங் முடில. இதுதான் அப்டேட்டு.

நான் முடிஞ்சிருச்சினு நினைச்சிட்டு இருந்தேன். எப்ப பாத்தாலும் ஒரு இரண்டு நாள் வரிங்களா, போய் எடுத்துட்டு வந்துடுவோம். மாசம் மாசம் இரண்டு நாள், மூணு நாள் அப்படியே எடுத்துட்டே இருக்கோம். என் மேல அவ்வளோ பாசம் மாரி செல்வராஜ் சாருக்கு. அருண் தான் பயங்கர காம்பெக்ட்டான ஆளு.40 நாள்லயேமுடிச்சிவிட்டாரு நெஞ்சுக்கு நீதி. பாவம் நிதி அகர்வால் தான் திருப்பி தமிழ்ல நடிப்பாங்களானு தெரியல. பைட் சீன்ஸ்ல என்னை விட அவங்க தான் அதிகமாக அடி வாங்கறது, குத்து வாங்கறது, ஒத வாங்கறது எல்லாமே.

கேமராமேன் சார், நீங்க பேர் மாத்தினதே எனக்கு தெரியாது. செந்தில்ன்னு நினைச்சிட்டு இருந்தன் உங்க பேரு. அப்ப தான் தில் ராஜ்-ன்னாங்க. ரொம்ப தில் வேணும் சார் அவரோட சேர்ந்து படம் பண்ணணும்னா. இங்க இருக்கக் கூடிய அனைத்து இயக்குநர்கள் கூடயும் நான் வேலை பாத்துட்டேன். சுந்தர்.சி சார் மட்டும் தான் மிஸ் ஆகிடுச்சி. 'தீயா வேலை செய்யணும் குமாரு' படம், நான் பண்ண வேண்டிய படம். ஓரளவு நல்லா பண்ணிருக்கோம். மகிழோட படங்கள் எப்படினு உங்களுக்குத்தெரியும். ஒரு பரபரப்பு இருக்கும் திரைக்கதையில. எல்லா கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். நவம்பர் 18ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகுது. நெஞ்சுக்கு நீதி மாதிரி, இந்த படமும் வெற்றிப் பெறணும்னு. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.

என்னமோ, தமிழ் சினிமாவ நான் தாங்கிப் பிடிச்சிட்டு இருக்கிற மாதிரி,நடிக்கறதநிப்பாட்டாதீங்க,நடிக்கறத நிப்பாட்டாதீங்கன்னா, நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல. மாரி சார கேளுங்க தெரியும். மாமன்னன் சூட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு.எட்டு நாள் சூட் முடிஞ்சிருச்சு.நான் போய் மாரி சார்ட்ட கேட்டேன். என்ன சார் எதுமே சொல்ல மாட்டிக்கிறீங்க. நீங்க நினைக்கிற மாதிரி நான் எதாவது பண்றேனா. நடிக்கறேனானு. தெரில சார், நான் ஒரு 10 நாள் கழிச்சி சொல்றேன்னு சொன்னாரு. நீங்கெல்லாம் வந்து சுருக்கமா பேசி, இந்த புரோகிராம இவ்வளவு சிம்பிளா, சீக்கிரமா முடியதறதுக்கு உதவி பண்ண உங்க அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவிச்சிக்கிறன்." இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

mari selvaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe