Udayanidhi Stalin joins Kamal.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் 'விக்ரம்'. வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' நிறுவனம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'விக்ரம்' திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.இப்போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கமல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisment