/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_46.jpg)
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது 'வல்லான்', 'தலைநகரம் 2' மற்றும் 'ஒன் 2 ஒன்' படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகியது.
இந்நிலையில் 'காஃபி வித் காதல்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதனை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)