/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tamil4343.jpg)
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கலகத்தலைவன்' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (10/11/2022) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், மாரிசெல்வராஜ், பிரதீப், சுந்தர்.சி, நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, "இன்றைக்கு இந்த மேடையில் நிற்கும் பொழுது, ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன், ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்காக படம் பண்ணக் கூடிய வாய்ப்பு என்றைக்கு வரும் என்று நான் நினைத்து ஏங்கிய அந்த தருணம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. இதற்கு நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலாமவரைப் பற்றி இறுதியாகப் பேசுகிறேன். இரண்டாமவரைப் பற்றி முதலில் ஓரிருவார்த்தைகளைக் கூற ஆசைப்படுகிறேன். சில மணித்துளிகள் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை இது ஒரு நன்றி அறிவிப்பு மேடை. நான் பல பேருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. செண்பகமூர்த்தி சார்ஒரு படத்தின் மேடையேறி இதுதான் நான் முதல் முறை பார்க்கிறேன். இந்தப் படம் நடப்பதற்கு உதய் எவ்வளவு பெரிய காரணமோ, அவ்வளவு பெரிய காரணம் செண்பகமூர்த்தி சார். அன்றைக்கு அந்தப் படம் ஆரம்பித்த தருணத்தில் இருந்து இன்று வரை எவ்வளவு பெரிய உறுதுணையாக, எவ்வளவு பெரிய பக்கபலமாக, காவல் சாமியாக இருக்கிறார் என்று எனக்கு மட்டுமே தெரியும்.
பார்ப்பதற்கு மிகவும் கரடுமுரடானவர்.ஆனால், மதுரை மண்ணுக்கே உரிய வெள்ளந்தி குணம், குழந்தை தனம் நிறைந்தவர். அவரோடு நான் நிறைய சண்டையிட்டுருக்கிறேன். கோபித்துக் கொண்டிருக்கிறேன். அவரோடு பேசாமல் இருந்திருக்கிறேன். இது எல்லாவற்றிற்கும் அவர் இடம் கொடுத்திருக்கிறார். இன்று வரை எனக்கு உடன்பிறவாச் சகோதரராக இருக்கிறார். அவருக்கு எனது நன்றி. அடுத்ததாக அர்ஜுன். வெரி டேலண்டட், எண்டர்பிரைசிங் யங் மேன். இந்த படத்தின் இணைத் தயாரிப்பாளர். முதல் நாள் பூஜையின் போது பார்த்தது.அதற்குப்பிறகு இப்பொழுது தான் பார்க்கிறேன்.
இந்த விழாவின் நாயகர்கள் கார்க்கி, பிரியன், ஏக்நாத் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா.இவர்கள் எல்லோரைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் பேச ஆசைப்படுகிறேன். நான் என்னைப் பற்றி பேசப் போவதில்லை. படத்தைப் பற்றியும் பேசப் போவது இல்லை. ஆனால், இவர்கள் யாருமின்றி படம் இல்லை என்பதனால் பேச வேண்டியகடமைப்பாடு எனக்கு இருக்கிறது. கார்க்கி என்னுடைய நண்பன். கார்க்கிகூட ஒரு படம் கூட பண்ணது இல்லை. பண்ணப் போவதும் இல்லை. அவர் தன்னை ஒரு கவிஞர் என்று அழைத்துக் கொள்வதே இல்லை. பாடலாசிரியர் என்று மட்டுமே சுருக்கிக் கொள்வார்.ஆனால், அவருடைய ஒவ்வொரு பாடலும், ஒரு கவிதையாகவே இருக்கிறது. அதை நாம் படிக்கலாம். ஒரு கவிதை என்ன வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்குமோ, அதே மாதிரி அவருடைய திரைப்பட பாடல்கள், அதே வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக் கூடியவை. அவர் எழுதக் கூடிய எந்தப் பாடலாக இருந்தாலும், அதில் ஒரு வரியைக் கூட மாற்ற முடியாது; மாற்றினால் அர்த்தம் மாறிவிடும்.
எனக்கு இன்றும் நன்றாக நியாபகம் இருக்கிறது.அவர் சொன்ன அந்த நிகழ்ச்சி. அவரது முதல் படத்தைப் பார்த்துவிட்டுவெளியே வருகிறேன். என்னுடைய கைகள் உதறிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்து சொல்கிறேன். 50 படங்களை நாம் வரிசைப்படுத்தினால், மாரி செல்வராஜ் உடைய பரியேறும் பெருமாள், படத்தின் ஓப்பனிங் சீன்ஸ் அதில் நிச்சயம் இடம்பெறும். அமைதியானவர்களிடம் இருந்து தான் மிக ஆழமான திரைப்படங்கள் பிறக்கின்றன. அதற்கு அருண்ராஜா காமராஜ் சிறந்த உதாரணம்." என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)