ஒரே இரவில் 30 லட்சம் பார்வைகளைக் கடந்த ஜோதிகா பட ட்ரைலர்!

udanpirappe

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இது, நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும்.

இப்படம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் நேற்று (04.10.2021) மாலை வெளியிடப்பட்டது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள இந்த ட்ரைலர், ஒரே இரவில் யூடியூப் தளத்தில் 30 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், யூடியூப் ட்ரெண்டிங் வரிசையில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe