/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/170_3.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இது, நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும்.
இப்படம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலரை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் சூர்யா, "உடன்பிறந்தவர்கள் மற்றும் அவர்களின் பிரிக்க முடியாத பிணைப்பு பற்றிய கதை. அவர்கள் உங்களை புன்னகைக்க, அழச் செய்ய, அதே நேரத்தில் சிரிக்கவும் வைப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரைலர் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே யூ-டியூப் தளத்தில் ஒன்றரை லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)