udanpirappe

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisment

2டி நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்த மாதம்முதல் மாதம் ஒரு படம் என அடுத்த நான்கு மாதங்களுக்கு மொத்தம் 4 படங்கள் வெளியாகவுள்ளன. இதில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக அமேசான் நிறுவனம் முன்னரே அறிவித்திருந்தது. இந்த நிலையில், ‘உடன்பிறப்பே’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ‘உடன்பிறப்பே’ திரைப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment