‘உதய்பூர் ஃபைல்ஸ்’; தயாரிப்பாளருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

237

இந்தியில் பாரத் எஸ் ஷ்ரினேட் இயக்கத்தில் அமித் ஜானி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘உதய்பூர் ஃபைல்ஸ்’. இப்படத்தில் விஜய் ராஸ், ரஜ்னீஷ் துக்கல், ப்ரீத்தி ஜாங்கியானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் ஆஷூ, ரேவன் ஆர்த்தி சிங், ஜிதேந்திர ஜாவ்தா ஆகிய மூன்று பேர் இசையமைத்துள்ளனர். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டு பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். இது உலகளவில் கண்டனத்தைப் பெற்றது. இதனிடையே ராஜஸ்தான் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் டெலி என்பவர் நுபுர் சர்மா கருத்தை ஆதரித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இவர் முகமது ரியாஸ் மற்றும் முகமது கவுஸ் என்ற நபர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ஜெய்ப்பூரில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

236

இந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் பட ரிலீஸ் தள்ளி போனது. இப்போது ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் அமித் ஜானிக்கு மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய ரிசர்வ் காவல் படையின் ஆயுதமேந்திய 11 காவலர்கள் பாதுகாப்புக்கு பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்த பாதுகாப்பு உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளுக்கு ஜானி செல்லும்போது மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

film producer Security
இதையும் படியுங்கள்
Subscribe