பாலா இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் பரதேசி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஈர்த்தவர் நடிகை ரித்விகா. இவர் இந்த படத்திற்கு பின் மெட்ராஸ், ஒருநாள் கூத்து, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/uber.jpg)
இதுமட்டுமல்லாமல் தமிழ் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று, அந்த வருடத்தின் வின்னரானார். இந்நிலையில் நடிகை ரித்விகா ட்விட்டரில் ஊபர் டிரைவர் குறித்து புகார் வைத்திருக்கிறார்.
அதில், ஊபர் ஓட்டுநர் ஜெய்னுலாப்தீன் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் காரை ஓட்டுகிறார். காரின் கண்டிஷனும் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்து காரின் நம்பர் முதற்கொண்டு ஊபர் நிறுவனம் இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500X300-02_16.jpg)
மேலும் இதற்கு ரிப்ளை செய்துள்ள ஊபர் நிறுவனம், அந்த ட்ரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Follow Us