
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நடிகர் சரத்குமாருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி, பார்த்திபன், நாசர், வெங்கட் பிரபு, ஆண்ட்ரியா உள்ளிட்ட சிலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.