விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் பிகில் படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் மாநகரம் இயக்குனருடன் இணைந்து பணிபுரிய இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதில் அனிருத் இசையமக்கிறார். விஜய்யின் நெறுங்கிய உறவினர் ஒருவர்தான் இந்த படத்தை தயாரிப்பதாகவும். சுமார் 120 நாட்கள் வரை விஜய் கால் ஷீட் கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Advertisment

vijay

இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் விஜய்யை வைத்து முதல்வன் 2 படத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. மீண்டும் தமிழ் திரையுலகில் தலை தூக்கியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களை வைத்து தற்போது படம் எடுத்துக்கொண்டிருக்கிறது. அதைபோல முன்னணி இயக்குனரான ஷங்கருடனும் இணைந்து ஒரு படம் எடுக்க அவர்கள் யோசனையில் இருப்பதாகவும் அதனால் விஜய்- ஷங்கர் இணைந்து உருவாக இருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் மீண்டும் தளபதி 64 படம் குறித்தான ஒரு தகவல் சமூக வலைதளத்தில் சுற்றி வருகிறது. அது என்ன என்றால் தளபதி 64 படத்தில் இரண்டு இளம் நடிகைகள் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும். அதில் இருவர் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த ராஷி கண்ணாவும் மற்றொருவர் கீதா கோவிந்தம் ராஷ்மிகா மந்தானா என்றும் பரவி வருகிறது. ராஷ்மிகா மந்தானாவின் பெயர் பிகில் படத்திலேயே அடிப்பட்டது ஆனால், நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதால் ராஷ்மிகா கைவிடப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.