Two men entered illegally in Shah Rukh Khan home

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் ராஜ் குமார் ஹிரானி இயக்கும் 'டன்கி' படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே மும்பையில் உள்ள ஷாருக்கானின் வீட்டில் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்ததாக இரண்டு பேரை கைது செய்தது மும்பை காவல் துறை. அவர்கள் கைதாவதற்கு முன்பு கிட்டத்தட்ட 8 மணி நேரம் வீட்டுக்குள் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

கைதானவர்களிடம் விசாரிக்கையில், தாங்கள் ஷாருக்கான் ரசிகர் என்றும் குஜராத்தில் இருந்து அவரைப் பார்க்க வந்ததாகவும் கூறினர். அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில், விசாரணையின் அடுத்த கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷாருக்கானை சந்திக்க அவரது மேக்கப் ரூமில் சுமார் எட்டு மணி நேரம் காத்திருந்துள்ளனர். அதாவது அதிகாலை 3 மணிக்கு உள்ளே நுழைந்த அவர்கள் மறுநாள் காலை 10.30 மணியளவில் பிடிபட்டுள்ளனர். இந்த தகவல் ஷாருக்கானுக்கு அதிர்ச்சியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

சமீப காலமாக பாலிவுட் திரைப் பிரபலங்கள் தனியுரிமை பாதிக்கும் வகையில் தொடர்ந்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஆலியா பட்வீட்டினுள் யாரோ இரண்டு ஆண்கள் அவரை அனுமதியின்றி புகைப்படம் எடுத்ததாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதையடுத்து சைஃப் அலிகான்நிகழ்ச்சி முடித்துவிட்டு அவரது வீட்டிற்குள் செல்லும்போது புகைப்படக் கலைஞர்களும் உள்ளே நுழைய முயற்சித்ததால் அவர்களை விமர்சித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஷாருக்கான் வீட்டில் இந்த சம்பவம் நடந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.