mish

Advertisment

சவரகத்தி வெற்றிக்கு பிறகு தற்போது சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு ஆகிய படங்களில் நடித்து வரும் மிஷ்கின் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்ற இருக்கிறார். மேலும் நளனும் நந்தினியும், சுட்ட கதை, மற்றும் விரைவில் வெளியாகவுள்ள நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது என்று படக்குழு அதிகார்பூர்வமாக டுவிட்டரில் அறிவித்தது. இந்நிலையில் தற்போது நாயகியாக நடிக்க சாய் பல்லவி மற்றும் நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.