ஒரே நாளில் வெளியாகும் சசிகுமாரின் இரு படங்கள்!

Two films by Sasikumar to be released on the same day

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, நாடோடிகள், சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். சசிகுமார் படம் இயக்குவதைவிட்டு, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் வெளியான உடன்பிறப்பு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, நடிகர் சசிகுமார் இயக்குநர் கதிர்வேல் இயக்கும் ராஜவம்சம் படத்திலும், இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய இரு படங்களிலும் நடித்து முடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால் படம் நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சசிகுமாரின்மற்றொருபடமான ராஜவம்சமும் அதே தேதியில் களத்தில் இறங்கியுள்ளது. இயக்குநர்கதிர்வேல் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் 'ராஜவம்சம்' படத்தில் நடித்துள்ளார். இதில், நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்திருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படம்நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. சசிகுமார் நடித்துள்ள இரு படங்களும்ஒரே நேரத்தில் வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Sasikumar NikkiGalrani
இதையும் படியுங்கள்
Subscribe