அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த இரண்டு மெகாஹிட் படங்களான வீரம் மற்றும் வேதாளம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்

Advertisment

Advertisment

முதலில் வீரம் படம் தமிழில் எடுக்கப்பட்டவுடன், தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் செம ஹிட் அடித்தது. இதனை அடுத்து வேதாளம் படத்தையும் பவன் கல்யாண் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், பவனின் அரசியல் பிரவேசம் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த இவ்விரு படங்களையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று பேசி வருவதாகவும். முதலில் வீரம் படத்தை ஹிந்தியில் விக்கி கௌஷல் நடிக்க இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கடந்த வாரமே செய்திகள் உலா வர தொடங்கிவிட்டன. தற்போது வேதாளம் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஜான் ஆப்ரஹாமை பேசி வருவதாக மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது.