laxmmi bomb

பாலிவுட்நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவிற்கு பின்னர் பாலிவுட்டில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாலிவுட்டில் போதை பொருள் பயன்பாடு.

Advertisment

அந்த விசாரணையில் சுசாந்தின் காதலியும், அவருடைய சகோதரரும் கைது செய்யப்பட்டனர் மற்றும் பிரபல நடிகர் நடிகைகளின் பெயர்களும் இந்த விசாரணைகளில் அடிபடுகிறது.

Advertisment

இந்நிலையில், போதை பொருள் விவகாரத்திற்கு பிரபல நடிகர் நடிகைகள் எதிராகவும்,குற்றம்சாட்டப்பட்ட நடிகர் நடிகைகளுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர் பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்கள்.

அந்த வகையில் நடிகர் அக்‌ஷய்குமார் கடந்த சனிக்கிழமை பாலிவுட்டில் நடைபெறும் போதை பொருள் விவகாரம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டார். அதில், நீங்கள் பாலிவுட்டில் இருக்கும் அனைவரையும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் போல பார்க்காதீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் அக்‌ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான ‘லக்‌ஷ்மி பாம்’ படம் வருகிற நவம்பர் 7ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாக உள்ளது. அந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் தடை செய்ய வேண்டும், புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் ஹேஸ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.