/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/424_6.jpg)
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் கடைசியாகத்தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். 2024ல் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ரஜினிக்கு தொலைபேசி வாயிலாக விஜய் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்சி தொடங்கியதற்கான காரணம் உள்ளிட்ட விஷயங்களை ரஜினிகாந்திடம் கூறி வாழ்த்து பெற்றதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)