“உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள்” - விஜய்

vijay ramzan wishes

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானம் மற்றும் கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், சமூக வலைத்தளப்பக்கம் வாயிலாக ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

த.வெ.க எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் சார்பாக பகிர்ந்துள்ள பதிவில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

actor vijay Ramzan Tamilaga Vettri Kazhagam
இதையும் படியுங்கள்
Subscribe